மேற்கு தொகுதியால் மாறிய தி.மு.க., கவுன்சிலர்கள் 'கணக்கு' l: இன்று நடக்கும் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் எதிரொலிக்குமா

மதுரை தி.மு.க., அரசியல் களம் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், நகர் செயலாளர் தளபதி, தெற்கு மா.செ., மணிமாறனை சுற்றியே நகர்கிறது.
மாநகராட்சி கூட்டத்தில்இவர்களின் ஆதரவு நிலைப்பாட்டில் தான் ஆளுங்கட்சி கவுன்சிலர்களின் பேச்சும், செயல்பாடும் அமையும். தற்போதைய நிலவரப்படி மாநகராட்சியில் தி.மு.க., - 67, அ.தி.மு.க., -15, காங்., - 5, மார்க்சிஸ்ட் கம்யூ., -4, ம.தி.மு.க., -3, பா.ஜ., -1, வி.சி.க., -1, சுயே., -4 கவுன்சிலர்கள் உள்ளனர்.
இதுவரை நகரில் நான்கு சட்டசபை தொகுதிகளை தன்வசம் கொண்டிருந்த தளபதியின் ஆதரவு கவுன்சிலர்களே மாநகராட்சியில் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். இவரது சம்மதத்தில்தான் அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளரான இந்திராணி பொன்வசந்த் மேயராகவும் நீடிக்கிறார்.
மேயர் தேர்வின்போது மூர்த்தி ஆதரவாளரான மண்டலம் 1ன் தலைவர் வாசுகியும் இருந்தார். மூர்த்தி வசம் கவுன்சிலர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் வாசுகியை பதவியில் அமர்த்த முடியவில்லை.
ஆனால் மேற்கு தொகுதிக்கும் மூர்த்தி மா.செ., ஆனதால், 50 சதவீதம் கவுன்சிலர்கள் மூர்த்தி வசம் வந்துவிட்டனர். தொகுதி மாற்றத்திற்கு பின் முதல்முறையாக மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் இன்று நடக்கிறது. மூர்த்தி கட்டுப்பாட்டிற்குள் வந்த கவுன்சிலர்களின் பேச்சு, செயல்பாடுகள் கவனித்தக்கதாக இருக்கும்.
மேலும்
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
-
சமயநல்லுாரில் ரயில்வே கேட் அவதி
-
வங்கக்கடலில் நிலநடுக்கம்! கோல்கட்டாவில் உணரப்பட்ட அதிர்வுகள்