மாணவி சாதனை

மதுரை: சென்னையில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 6வது இளையோர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது. இதில் 18, 20, 23 வயது பிரிவுகளில் தடகள போட்டிகள் நடந்தன.

இதில் மதுரை கல்லுாரி மாணவி மாரிச்செல்வி 400 மீ.,யில் வெண்கல பதக்கம், 200 மீ.,யில் வெள்ளி, 400 மீ., தொடர் ஓட்டம் (புதிய சாதனை) தங்கம், 1600 மீ., தொடர் ஓட்டத்தில் தங்கம் என பெற்று சாதனை புரிந்தார்.

அவரை ஒலிம்பிக் கோல்ட் பவுண்டேஷன் தலைமை பயிற்சியாளர் திருஞானதுரை, பயிற்சியாளர் முத்துப்பாண்டி பாராட்டினர்.

Advertisement