சாலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
பிள்ளைபாக்கம் சிப்காட்டின் ஒரு பகுதியான இங்கு, 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. 7 மீட்டர் அகலம் கொண்ட வெங்காடு பிரதான சாலையை விரிவுபடுத்த, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய் துறையினர், இங்குள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு 'நோட்டீஸ்'வழங்கினர்.
இந்த நிலையில், சாலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100க்கும் மேற்பட்டோர், வெங்காடு பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் சதீஷ் மற்றும் போலீசார் பேச்சு நடத்தினர். மேலும், நெடுஞ்சாலைத் துறையினரிடம் பேசுவதாக உறுதியளித்ததை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement