மருந்து விற்பனை துவக்கம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த பாலுச்செட்டிசத்திரம் பகுதியில், முதல்வர் மருந்தகத்தில் விற்பனை துவக்க விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் ஜெயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கைத்தறி துறை அமைச்சர் காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, முதல்வர் மருந்தகத்தில் குத்து விளக்கேற்றி, மருந்துகள் விற்பனையை துவக்கி வைத்து பேசியதாவது:

கூட்டுறவு சங்கங்களின் வாயிலாக 16 மருந்தகங்கள் மற்றும் தொழில் முனைவோர் வாயிலாக நான்கு மருந்தகம் என, 20 மருந்தகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. காஞ்சி மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கிற்கு, 73.16 லட்சம் ரூபாய்க்கு மருந்துகள் இருப்பு உள்ளன. இதில், ஜெனிரிக் வகை மருந்துகள் மற்றும் பிற ரக மருந்துகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவற்றை மக்கள் வாங்கி பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement