அரசு பஸ் நடத்துநர் மீது போக்சோ வழக்கு கர்நாடக போலீசார் மீது அமைச்சர் அதிருப்தி

பெலகாவி: ''கர்நாடக அரசு பஸ் நடத்துநர் மீது வேண்டுமென்றே, மராத்தியர்கள் போக்சோ புகார் அளித்துள்ளனர். பொது அறிவு கூட இல்லாத கர்நாடக போலீசார், நடத்துநர் மீது வழக்கை பதிவு செய்துள்ளனர்,'' என போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
பெலகாவியில் தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரசு பஸ் நடத்துநர் மஹாதேவப்பா மாலப்பா ஹுக்கேரியை, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின், ராமலிங்க ரெட்டி அளித்த பேட்டி:
சிறிய காரணத்துக்காக, பெலகாவியில் அரசு நடத்துநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. தற்போது அவர் உடல் நலம் தேறி வருகிறார்.
இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பார். தினமும் அவரின் உடல் நலம் குறித்து, நிர்வாக இயக்குனர் விசாரித்து வருகிறார்.
சம்பவம் நடந்த அன்று, பஸ்சில் 90 பேர் பயணித்தனர். 65 ஆண்டுகளாக கே.எஸ்.ஆர்.டி.சி., ஊழியர்கள் மீது இது போன்ற புகார்கள் வந்ததில்லை. அவர் மீது வேண்டுமென்றே பொய் புகார் அளித்துள்ளனர்.
பொது அறிவு இல்லாமல், நடத்துநர் மீது போலீசார் 'போக்சோ' வழக்கை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், மாநில போலீஸ் டி.ஐ.ஜி.,யிடம் பேசியுள்ளார். பொய் வழக்கு சுமத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அரசு, பொது மக்கள், போலீசார், மஹாதேவப்பாவுக்கு ஆதரவாக உள்ளனர்.
மஹாராஷ்டிரா பஸ்சின் மீது, இங்குள்ளோர் தான் முதலில் 'கருப்பு மை' பூசினர். அதற்கு மறுநாள், மஹாராஷ்டிராவில், கர்நாடக அரசு பஸ் மீது கருப்பு மை பூசப்பட்டது.
இதனால், எந்த பிரயோஜனமும் இல்லை. மாறாக, இரு மாநிலங்கள் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்; அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள், சிறையில் அடைக்கப்பட்டனர். கர்நாடக அரசு ஊழியரை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தது சரியே. இதில் சிவசேனா அமைப்பினர் மூக்கை நுழைக்க கூடாது.
மஹாராஷ்டிராவில் கர்நாடக அரசு பஸ், ஊழியர்களை தாக்கியவர்கள் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு சிறு விஷயங்களுக்காக அண்டை மாநிலங்களுடன் உள்ள நல்லுணர்வு பாதிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
-
சமயநல்லுாரில் ரயில்வே கேட் அவதி
-
வங்கக்கடலில் நிலநடுக்கம்! கோல்கட்டாவில் உணரப்பட்ட அதிர்வுகள்
-
வருவாய்க்கு அதிகமாக சொத்து குவிப்பு: கோவை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மீது பாய்ந்தது வழக்கு