எழில் நகரில் ரூ.9.25 கோடியில் மினி மார்ட், சமூக நல மையம்

எழில் நகர், சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, எழில் நகர் மற்றும் சுனாமி நகரில், மினி மார்ட் மற்றும் சமூகநல மையம் அமைக்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. இதற்காக, 9.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதில், 2,500 சதுர அடி பரப்பில் மினி மார்ட் கட்டப்படுகிறது.

இதில், இ - சேவை மையம், டெய்லர் கடை, மருந்தகம், எழுது பொருள் விற்பனை உள்ளிட்ட கடைகள் அமைய உள்ளன.

அதே போல், 4,300 சதுர அடி பரப்பில் சமூகநல மையம் அமைக்கப்படுகிறது.

இதில், திறன் வளர்ப்பு பயிற்சி கூடம், டியூசன் சென்டர், சேவை மையம் உள்ளிட்ட வசதிகள் அமைகின்றன. இரண்டு பணிகளையும், ஆறு மாதங்களில் முடிக்க, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement