இ.சி.ஆர்., ஓ.எம்.ஆரில் பூங்காக்கள் மேம்பாடு
சோழிங்கநல்லுார், இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரை உள்ளடக்கிய சோழிங்கநல்லுார் மண்டலத்தில், ஒன்பது வார்டுகள் உள்ளன. இதில், 38 பூங்காக்கள், 18 விளையாட்டு மைதானங்கள் உள்ளன.
இதில், பல உபகரணங்கள் மற்றும் நடைபயிற்சி பாதை உள்ளிட்ட வளாக கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
இதனால், பொதுமக்கள் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, 38 பூங்காக்களை மேம்படுத்த, 4.50 கோடி ரூபாய் மற்றும் 18 விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த, 2.32 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement