பாறையில் நின்று செல்பி எடுத்தவர் கடலில் பலி

நாகர்கோவில் : சேலம் மாவட்டம் மாரமங்கலத்தைச் சேர்ந்தவர் விஜய் மணி 27. இவர் உட்பட 27 பேர் நாகர்கோவிலில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தனர்.

நிகழ்ச்சியை முடித்து விட்டு கன்னியாகுமரிக்கு வந்தவர்கள் கடற்கரையை ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது விஜய் மணி தடை செய்யப்பட்டிருந்த பாறையில் ஏறி நின்று செல்பி எடுத்த போது கால் தவறி கடல் விழுந்தார். சக நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. கடலோர பாதுகாப்பு போலீசார் படகு மூலம் தேடினர்.

இரண்டாவது நாளான நேற்று விஜய் மணியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பின் மருத்துவ பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement