அரசு கல்லுாரி கட்டட பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் உத்தரவு

ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரம் அரசு கலைக் கல்லுாரி கட்டட பணியை ஆய்வு செய்த அமைச்சர் ஐ.பெரியசாமி

துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

உயர் கல்வி துறை சார்பில் ரெட்டியார் சத்திரத்தில் அரசு கலைக் கல்லுாரி செயல்பட்டு வருகிறது .இதற்கான நிரந்தர கட்டட கட்டுமான பணி 14.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரெட்டியார்சத்திரம் அருகே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2022 ஜூலை 7ல் துவங்கிய இப்பணியில் தரை தளத்தில் நிர்வாக அலுவலகம் 3 வகுப்பறைகள்,நுாலகம், அலுவலர், தலா 2 ஆசிரியர்கள், துறை அலுவலர்கள், மாணவர்களுக்கான சுகாதார வளாகம் அமைய உள்ளது.

இரண்டாவது தளத்தில் 6 வகுப்பறைகள், உடற்கல்வி ஆசிரியர் அறை, 2 ஆய்வகங்கள், தலா ஒரு கம்ப்யூட்டர் லேப், மாணவர்களுக்கான சுகாதார வளாக வசதிகளுடன் அமைய உள்ளது. நேற்று இங்கு வந்த அமைச்சர் பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார் .விபரங்களை கேட்டறிந்த அமைச்சர் வரும் அக்டோபருக்குள் பணிகளை துரிதப்படுத்தி முடிக்க உத்தரவிட்டார்.

Advertisement