சிறுமியிடம் அத்துமீறல் பூசாரி 'போக்சோ'வில் கைது

சென்னை, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண், தன் கணவரை பிரிந்து, 7 வயது மகளுடன் வசித்து வருகிறார். சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார்.
மூன்று நாட்களாக சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, பாலியல் தொல்லையில் சிக்கியது தெரிந்தது. தாய் வேலைக்கு செல்வதால், சிறுமியை பாட்டியின் வீட்டில் விட்டு செல்வது வழக்கம். பாட்டி வீட்டின்அருகே வசிக்கும் அய்யப்பன் கோவில் பூசாரியான, புளியந்தோப்பை சேர்ந்த சேகர், 56, 'டிவி' பார்க்கலாம் என்று சிறுமியை, தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.
சேகரிடம் கேட்டபோது, அவர் தன் தவறை ஒப்புக் கொண்ட நிலையில், சிறுமியின் தாய், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேகரை நையப்புடைத்து, புளியந்தோப்பு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த சேகர், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்
-
விசைத்தறி தொழிலுக்கு கூட்டு கமிட்டி இருந்தால் வளர்ச்சிக்கு வழி! ஜவுளி தொழில் முனைவோர் எதிர்பார்ப்பு
-
பொதுஇடம், நீர்நிலையில் குப்பை கொட்டினால் வழக்கு பாயும்! திடக்கழிவு மேலாண்மை சட்டத்தில் நடவடிக்கை
-
இதற்கோர் வழி காணுங்க மின் மீட்டர் இல்லாது தொழில் தொடங்குவோர் பாதிப்பு வீடு கட்டுவோரும் மின் இணைப்பு பெற முடியாது அவதி
-
சட்டவிரோத மணல் ஆலைகள் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
-
பள்ளியில் விளையாட்டு விழா
-
மூன்று மாதமாக சம்பளம் கிடைக்காமல் அவதி.. திண்டாடும் பணியாளர்கள்! 100 நாள் வேலை திட்ட பிரச்னை தீர்க்கப்படுமா?