இதற்கோர் வழி காணுங்க மின் மீட்டர் இல்லாது தொழில் தொடங்குவோர் பாதிப்பு வீடு கட்டுவோரும் மின் இணைப்பு பெற முடியாது அவதி

நத்தம்: திண்டுக்கல் மாவட்டத்தில் மின் மீட்டர்கள் பற்றாக்குறையால் புதிதாக தொழில் தொடங்குபவர்கள்,வீடு கட்டுபவர்கள் மின் இணைப்பு பெற முடியாமல் பாதிக்கின்றனர்.
மாவட்டத்தில் நத்தம், சாணார்பட்டி, வடமதுரை, பழநி உள்ளிட்ட பகுதிகளில் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின் இணைப்பு கொடுக்கவசதிகள் இருந்தும் போதுமான மின் மீட்டர்கள் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் புதிதாக வீடு கட்டுபவர்கள் தற்காலிக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கும் போது இணைப்பு விரைவில் வழங்குவதில்லை. அதே நேரம் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகளின் பயன்பாட்டில் உள்ள மின் மீட்டர் பழுதடைந்தால் உடனடியாக மாற்றி தருவதில்லை. அதற்கும் காலதாமதம் ஆகிறது. மின் மீட்டர் பழுதடைந்து புதிய மின் மீட்டர் பொருத்தவும் பழுது பார்க்கவும் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தாலும் இரண்டு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை காலதாமதமாகிறது. இதனால் தொழில் தொடங்குவோர், வீடு கட்டுவோர் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர்.தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தினர் தங்கு தடை இன்றி புதிய மின் மீட்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
..........
எப்படி தொழில் பெருகும்
மின் இணைப்பு வேண்டியும், தற்காலிக மின் இணைப்பு கேட்டும் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் விண்ணப்பித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் மின் மீட்டர்கள் பற்றாக்குறையால் மின் இணைப்பு கிடைக்காமல் புதிதாக தொழில் தொடங்குபவர்கள், ஓட்டல், பேக்கரி, வீடு கட்டுபவர்கள் என ஏராளமானவர் பாதிப்பை சந்திக்கின்றனர். மின் பொறியாளர்களிடம் கேட்டால் எப்போது மின் மீட்டர் வரும் என அவர்களுக்கே தெரியவில்லை. எப்போது மின்சாரம் கிடைக்கும் என தெரியாமலும் தொழில் தொடங்க முடியாமலும் பாதிப்பை சந்திக்கின்றனர். இப்படி இருந்தால் எப்படி தொழில் வளர்ச்சி பெருகும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஆ.ஜெயக்குமார், அ.தி.மு.க., தகவல் பிரிவு இணை செயலாளர், நத்தம்.
.....
மேலும்
-
எதிர்த்து எவர் வந்தாலும் எதிர்கொள்வோம்; லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
தங்கம் விலை இன்றும் உயர்வு; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்