சட்டவிரோத மணல் ஆலைகள் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
வேடசந்துார் : திண்டுக்கல் மாவட்டம் சின்ன முத்தனம்பட்டி ஜெயபால். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
வேடசந்துார் பகுதி நீர்நிலைகளில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர். அதில் ரசாயனம் கலப்பதால் 'எம்' 'சாண்ட்' போல் தோற்றமளிக்கிறது. சிலர் அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் ஆலைகள் நடத்துகின்றனர்.
மணல் கலவையை தண்ணீரில் கழுவி, ரசாயனம் கலந்த கழிவுநீரை அருகிலுள்ள நீர்நிலைகளில் கலக்க விடுகின்றனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
ஆலைகளை கனிமவளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறலுக்கு அபராதம் விதித்து ஆலை, குவாரிகளை மூட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு தமிழக கனிமவளத்துறை முதன்மைச் செயலர், திண்டுக்கல் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மேலும்
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
-
சமயநல்லுாரில் ரயில்வே கேட் அவதி
-
வங்கக்கடலில் நிலநடுக்கம்! கோல்கட்டாவில் உணரப்பட்ட அதிர்வுகள்