இரட்டையின பட்டுப்புழு வளர்ப்பில் நவீன தொழில் நுட்பம் குறித்து பயிற்சி

மல்லசமுத்திரம்: மரப்பரை கிராமத்தில், வேளாண்துறை சார்பில், இரட்டையின பட்டுப்புழு வளர்ப்பில் நவீன தொழில்நுட்பம் குறித்து, விவசாயி-களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
மல்லசமுத்திரம் வட்டாரத்தில், வேளாண் துறையின் கீழ் செயல்-படும், 'அட்மா' திட்டம் மூலம் மரப்பரை கிராமத்தில், பட்டுப்-புழு வளர்ப்பில் நவீன தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு நேற்று பயிற்சி முகாம் நடந்தது.


வேளாண்மை உதவி இயக்குனர் யுவராஜ் தலைமை வகித்தார்.
அவர், வேளாண்மைத்துறை சார்ந்த மத்திய மற்றும் மாநில திட்-டங்கள், விவசாயிகளுக்கு தனி குறியீடு வழங்கும் முகாம், உயிர் உரங்கள் பயன்பாடு குறித்து எடுத்துரைத்தார். பட்டுவளர்ப்புத்-துறை இளநிலை ஆய்வாளர் செந்தமிழ்ச்செல்வி, பட்டுப்புழு வளர்ப்பில் ரசாயன உரங்கள் பயன்பாடு, பட்டுப்புழு வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள், மல்பெரி தோட்டம் பராமரிப்பு முறைகள், மனையில் ஈரப்பதம், வெப்பநிலை பராமரிப்பு, கிருமி நீக்கம் செய்தல், புழு வளர்ப்பு மனையில், கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துதல், இளம்புழு வளர்ப்பு, முதிர் புழு வளர்ப்பு, மூன்றாம் பருவத்தின் முக்கியத்தும் குறித்து விளக்கம-ளித்தார்.
நாமக்கல், பி.ஜிபி., வேளாண்மை கல்லுாரியிலிருந்து கிராமப்புற அனுபவ பயிற்சிக்கு மல்லசமுத்திரம் வட்டாரத்திற்கு வருகைபு-ரிந்துள்ள மாணவர்கள், வெங்காய சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை, உதவி வேளாண்மை அலுவலர் மோகன், அட்மா திட்ட அலுவலர்கள், இளநிலை ஆய்வாளர் செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement