சமயநல்லுாரில் ரயில்வே கேட் அவதி

வாடிப்பட்டி; சமயநல்லுார் - தோடனேரி இடையே ரயில்வே கேட் அடிக்கடி மூடுவதால் இப்பகுதி கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.

இந்த கேட் ஒரு நாளில் 80 முதல் 100 முறைக்கு மேல் மூடப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்வோரின் போக்குவரத்து தடைபடுகிறது.

சமயநல்லுார் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்கள் நின்று செல்லும் போதும், கூட்ஸ் ரயில்கள் மற்ற ரயில்கள் செல்ல காத்திருக்கும் போதும் ரயில்வே கேட்டின் இருபுறமும் வாகன ஓட்டிகளும் அதிக நேரம் காத்திருக்க நேரிடுகிறது. இப்பகுதியில் பாலம் அமைத்து தர வேண்டும் என கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

பா.ஜ., நிர்வாகி முத்துப்பாண்டி கூறியதாவது: காந்திநகர், சடச்சியம்மன் கோயில் தெரு, பர்மா காலனி, தோடனேரி வழியாக 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த ரோட்டை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இங்குள்ள கண்மாய் மறுகால் ஓடை வழியாக தண்டவாளங்களை கடந்து செல்லும் சுரங்கப் பாதை 30 ஆண்டுகளுக்கு முன்

பயன்பாட்டில் இருந்தது. தற்போது கழிவு நீர் ஓடையாக மாறி துார்ந்து போனது.

அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அண்டர் பாஸ் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement