வருவாய்க்கு அதிகமாக சொத்து குவிப்பு: கோவை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மீது பாய்ந்தது வழக்கு

கோவை: வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் அம்மன் அர்ஜுனன். அ.தி.மு.க.,வில் மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். முந்தைய சட்டமன்றத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.
எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் மட்டுமின்றி அவரது மனைவி விஜயலட்சுமி பெயரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் வருவாயைக் காட்டிலும் 2 கோடிக்கு 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கூடுதலாக குவித்துள்ளதாக அர்ஜுனன் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
இது, அவரது வருவாயைக் காட்டிலும் 71.19 சதவீதம் அதிகம் என்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளனர். இதற்கிடையே, கோவையில் இன்று காலை முதல் அம்மன் அர்ஜுனனுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (5)
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
25 பிப்,2025 - 09:21 Report Abuse

0
0
Reply
xyzabc - ,இந்தியா
25 பிப்,2025 - 09:02 Report Abuse

0
0
Reply
வீரபத்திரன்,கருங்காலக்குடி - ,
25 பிப்,2025 - 08:50 Report Abuse

0
0
Reply
ராஜ் - ,
25 பிப்,2025 - 08:26 Report Abuse

0
0
Reply
ravi subramanian - ,இந்தியா
25 பிப்,2025 - 08:10 Report Abuse

0
0
Reply
மேலும்
-
எதிர்த்து எவர் வந்தாலும் எதிர்கொள்வோம்; லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
தங்கம் விலை இன்றும் உயர்வு; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
Advertisement
Advertisement