தடையை மீறி ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் கோரிக்கைகளுக்கான போராட்டங்கள் ஏதும் நடத்தக் கூடாது என செயல்முறை ஆணைகள் கலெக்டரால் வெளியிடப்பட்டுள்ளது.

இதை கண்டித்து தடையை மீறியும் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் குருசாமி, செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமார், முருகன், லட்சுமி, இந்திய கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் காளிதாஸ், தமிழ்புலிகள் அமைப்பின் விடியல் வீரப்பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் கலெக்டர் ஜெயசீலனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Advertisement