ஜெ., பிறந்த நாள்: முதல்வர் மரியாதை

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி கடற்கரை சாலை மேரி கட்டடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.

Advertisement