கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்

மதுரை; மாநகராட்சியுடன் 2011ல் இணைந்தும் இன்று வரை பாதளாச் சாக்கடை, குடிநீர், ரோடு போன்ற அடிப்படை வசதிஇன்றி, கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடைப்பட்ட நரகத்தில் வாழ்வது போல வசிக்கின்றனர் அனுப்பானடி தாய் நகர் குடியிருப்பு வாசிகள்.பிரதான ரோடு, விவேகானந்தர் தெரு, அம்மன் தெரு பகுதியில் 2500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மேம்பாட்டுக்காக செயல்படம் குடியிருப்போர் சங்கத் தலைவர் முருகானந்தம், துணைத் தலைவர் ஜெயக்குமார், செயலாளர் மோகன், இணைச் செயலாளர் மனோகரன், துணைச் செயலாளர்பன்னீர்செல்வம், பொருளாளர் செந்தில்குமார், செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணன் கூறியதாவது:
பாதாளச் சாக்கடை வேண்டும்
இன்னும் பாதளாச்சாக்கடை வசதியில்லை. திருப்பரங்குன்றம் 89, 90வது வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கி விட்டனர்.
இங்கு பம்பிங் ஸ்டேஷன் உள்ளதால் திட்டத்தை விரைந்து தொடங்க வேண்டும். கிருஷ்ணன் காலனி 1, 2வது தெருக்களில் காலி மனைகளில் கழிவுநீர் தேங்குகிறது. வாய்க்கால் துார்வாரப்படாமல், பராமரிப்பின்றி உள்ளதால் 15 அடி அகலத்தை ஆக்கிரமித்து 5 அடியாக்கிவிட்டனர். தெருநாய்கள் வெறிநாயாக திரிகின்றன. இந்த அநியாயங்களை கேட்பாரில்லை.
மினி பஸ் வசதி வேண்டும்
அனுப்பானடி பிரதான ரோட்டில்தான் பஸ் வசதி உள்ளது. இதனால் மற்ற பகுதியினர் ஆட்டோக்களை நம்பி உள்ளோம். தற்போது அறிவித்துள்ள மினி பஸ் திட்டத்தில் மந்தையில் பஸ் நிறுத்தம் வேண்டும். கமிஷனர் மக்களைத் தேடி சுழற்சி முறையில் 2 அல்லது 3 வார்டுகளை இணைத்து குறைதீர் கூட்டம் நடத்தலாம். அம்ரூத் திட்டத்தில் வள்ளலார் தெரு உள்ளிட்ட விடுபட்ட பகுதியில் குழாய் அமைக்க வேண்டும்.
குடிநீர் லாரி வேண்டும்
வாரம் 3 லாரிகள் குடிநீர் விநியோகம் செய்கின்றனர். குறுகலான தெருக்களாக இருப்பதால் லாரியால் உள்ளே வர முடியாது. அனைவரும் குடிநீர் பிடிக்க கஷ்டமாக உள்ளது. கூடுதலாக ஒரு லாரி வந்தால் சமாளிக்கலாம். ஆடு வதை இடத்தில் பூங்கா அமைத்து கொடுத்தால் பயன்பெறுவோம். அனைத்து ரோடுகளும் மேடும் பள்ளமுமாக இருக்கின்றன.
சுகாதார மைய இடையூறு
4 கி.மீ., தொலைவில் உள்ள சிந்தாமணி ஆரம்ப சுகாதார மையத்தில் தாய்நகர் இணைக்கப்பட்டுள்ளது. அருகில் இருக்கும் அனுப்பானடி சுகாதார மையத்தை பயன்படுத்துவதில் உள்ள சிக்கலை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். ரேஷன் கடை வெவ்வேறு பகுதியில் உள்ளது. இங்கு 800க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. எனவே தனி ரேஷன் கடை வேண்டும் என்றனர்.
மேலும்
-
சட்டசபையில் கூச்சல், குழப்பம்; ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 12 பேர் சஸ்பெண்ட்
-
ஆந்திராவில் யானைகள் தாக்கி 5 பக்தர்கள் பரிதாப பலி
-
சீமான் வீட்டை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்க பிளான்: 10 பேர் கைது
-
பா.ஜ,வில் இருந்து ரஞ்சனா நாச்சியார் விலகல்
-
பாலியல் வழக்குகளில் நேற்றைய தினம் கைதானவர்கள்!
-
அரசு பதவியை உதறிய விவேக் ராமசாமி; ஓஹியோ கவர்னர் பதவிக்கு போட்டி!