அங்கன்வாடி மையம் புனரமைப்பு

புதுச்சேரி: உழவர்கரை ஜெ.ஜெ. நகர் அங்கன்வாடி மையத்தை, என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி சொந்த செலவில் புனரமைத்து கொடுத்தார்.
புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் பழுதடைந்துள்ள அரசு அங்கன்வாடி மையங்கள், என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமியால், புனரமைக்கப்பட்டு வருகிறது.
உழவர்கரை ஜெ.ஜெ., நகர் அரசு அங்கன்வாடி மையம் பழுதாகி, பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், அதனை சரி செய்து கொடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி கேசவனை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதையேற்ற அவர், அந்த அங்கன்வாடி மையத்தை தனது சொந்த செலவில் புனரமைத்தார். இதன் மூலம் 2வது அரசு அங்கன்வாடி மையத்தை அவர் புனரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் உழவர்கரை என்.ஆர்.காங்., முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து, உழவர்கரை தொகுதியில் இயங்கும் 3வது அரசு அங்கன்வாடி மையத்தையும் புனரமைத்து புதுப்பிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
மேலும்
-
வங்கக்கடலில் நிலநடுக்கம்! கோல்கட்டாவில் உணரப்பட்ட அதிர்வுகள்
-
வருவாய்க்கு அதிகமாக சொத்து குவிப்பு: கோவை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மீது பாய்ந்தது வழக்கு
-
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு
-
புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
-
தடையை மீறி ஆர்ப்பாட்டம்
-
சஸ்பெண்ட் ரத்து போராட்டம் ஊதிய பிடித்த பட்டியல் கேட்பு