சிறுமி தற்கொலை

சிக்கபல்லாபூர்: காதலன் வேறொரு பெண்ணுடன் பேசியதால், சிறுமி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிக்கபல்லாபூர் மாவட்டம் மாச்சேனஹள்ளியின் சதேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுசித்ரா, 17. இவரும், அதே கிராமத்தை சேர்ந்த ஆதர்சும் காதலித்து வந்துள்ளனர்.

வேறொரு பெண்ணுடன் ஆதர்ஷ் பேசுவதை சுசித்ரா கவனித்தார். இது தொடர்பாக, இருவருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினமும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

தன் பேச்சை காதலன் கேட்காததால், நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாச்சேனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement