தங்கவயலில் ஜெ., பிறந்த நாள்

தங்கவயல்,: தங்கவயல் தொகுதி அ.தி.மு.க., மற்றும் கர்நாடக மாநில அண்ணா தொழிற் சங்கப்பேரவை சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

தங்கவயல் தொகுதி அ.தி.மு.க., சார்பில் அதன் செயலர் பொன் சந்திரசேகர், வி.சி.நடராஜன், ஜெகநாதன் உட்பட கட்சியின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் ராபர்ட்சன்பேட்டை காந்தி சதுக்கத்தில் நடந்த விழாவில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்து இனிப்புகள் வழங்கினர். ஆல்பர்ட் ஆனந்த், மோகன் ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

அண்ணா தொழிற் சங்கப்பேரவை சார்பில் அதன் மாநில செயலர் மு.அன்பு தலைமையில் ராபர்ட்சன்பேட்டை பஸ் நிலையத்தில் நடந்த விழாவில் இனிப்புகள், மதிய உணவு, ஏழைகளுக்கு இலவச சேலைகள் வழங்கினர்.

பழக்கடை கதிரவன், புருஷோத்தமன், ஏ.அசோக்குமார், சவுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement