பள்ளி வாகனங்கள் பறிமுதல்

பெங்களூரு: பெங்களூரில் தனியார் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரை ஏற்றி செல்லும் வாகனங்கள் சாலையில் தாறுமாறாக செல்கின்றன. இது குறித்து, சில மாணவர்களின் பெற்றோர், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.

இதன் பேரில், நேற்று பல இடங்களில் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் சோதனையிட்டனர். சாலை விதிகளை மீறிய வாகனங்கள், அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்கள், தகுதி சான்றிதழ் எடுக்காத வாகனங்கள் என 100க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆர்.டி.ஓ., அதிகாரிகள் கூறுகையில், 'தனியார் பள்ளி வாகனங்கள், பள்ளி நிர்வாகத்தின் பெயரிலே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். வாகனங்களில் பள்ளி, கல்லுாரி பெயர், முகவரி, தொலைபேசி எண், கேமராக்கள், அவசர கால எச்சரிக்கை பட்டன், முதலுதவி பெட்டி, தீ அணைப்பு கருவி ஆகியவை இருக்க வேண்டும்' என்றனர்.

Advertisement