பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி

1

சோழவந்தான்; சோழவந்தான் அருகே பொம்மன்பட்டியில் 400 குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை. ஒரு கி.மீ., நடந்து மேல்நாச்சி குளத்திற்கு வரும் பஸ்சை ஓடிச்சென்று பிடிக்கின்றனர். அதனை தவறவிட்டால் மேலும் ஒரு கி.மீ.,நடக்க வேண்டும். கிராமத்தில் இருந்து அக்கிராமத்தினர் தினமும் 100 பேர் வெளியூர் செல்கின்றனர்.

இதில் கீழ்நாச்சிகுளம் ஆதிதிராவிடர் அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் வயல் வரப்புகளில் தடுமாறி செல்கின்றனர். பஸ் இயக்க வலியறுத்தி 2024ல் எம்.எல்.ஏ.,வெங்கடேசன் வழங்கிய கடிதத்தையும் கண்டுகொள்ளவில்லை. இந்திய கம்யூ., மூர்த்தி கூறுகையில், ''சோழவந்தான் பள்ளிக்கு அதிக மாணவிகள் செல்கின்றனர். மாலையில் பள்ளி விடும் முன்பே பஸ் வந்துவிடுகிறது. இதனால் மாலை, இரவு நேரங்களில் கால்வாய் கரை ரோட்டில் வரும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கள் கிராமத்திற்கு பஸ் இயக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement