எட்டு நாட்களில் 'கிரஹ லட்சுமி' அமைச்சர் லட்சுமி தகவல்

பெலகாவி: ''இன்னும் எட்டு நாட்க ளில், மூன்று மாதங்களுக்கான கிரஹ லட்சுமி பணம் பயனாளிகளின் கணக்குக ளில் செலுத்தப்படும்,'' எனமகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்தார்.
பெலகாவியில் நேற்று அவர் கூறியதாவது:
எந்த காரணத்துக்காகவும், 'கிரஹ லட்சுமி' திட்டம் நிறுத்தப்படாது. பத்து நாட்களில் பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு, பணம் செலுத்தப்படும் என, நான் ஏற்கனவே கூறியிருந்தேன்.
இரண்டு நாட்கள் கடந்துள்ளன. அடுத்த எட்டு நாட்களில், பணம் வந்து சேரும். பெண்கள் ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை.
கிரஹ லட்சுமி திட்டம்நிறுத்தப்படும். பணம் கிடைக்காது என, பா.ஜ.,வினர் அவப்பிரசாரம் செய்கின்றனர். இதை பெண்கள் பொருட்படுத்த வேண்டாம்.
பெலகாவி மாவட்டத்தில், மொழி தொடர்பாக அனைத்து விவாதங்களையும், எங்கள் அரசு சரி செய்யும்.
யாரோ நான்கைந்து விஷமிகள், பணியில் இருந்த நடத்துனரை தாக்கியதால், அது மொழி பிரச்னை ஆகிவிடாது. மொழியின் பெயரில்அரசியல் பருப்பை வேக வைக்க முற்படுவோரை, நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
பெலகாவி ரூரல் தொகுதியில், ஏராளமான மராத்தி மொழியினர் வசிக்கின்றனர். இவர்கள் கன்னடரான எனக்கு ஓட்டு போட்டு, வெற்றி பெற வைத்தனர். இவர்களை கன்னட விரோதிகள் என, கூற முடியுமா.
இவ்வாறு அவர்கூறினார்.
மேலும்
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
-
சமயநல்லுாரில் ரயில்வே கேட் அவதி
-
வங்கக்கடலில் நிலநடுக்கம்! கோல்கட்டாவில் உணரப்பட்ட அதிர்வுகள்