ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த பெண் எஸ்.ஐ.,

ஷிவமொக்கா:கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய முயன்ற போது, போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்த ரவுடியை, பெண் எஸ்.ஐ., துப்பாக்கியால் சுட்டுபிடித்தார்.
ஷிவமொக்கா பத்ராவதி பழைய பேப்பர் டவுன் பகுதியில் வசிப்பவர் சித்திக். ரவுடி. கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்திக்கை, அரிவாளால் எதிர்கோஷ்டியை சேர்ந்த ஷாஹித் குரேஷி, 27 வெட்டினார். கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடினர். ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த, ஷாஹித் குரேஷியை நேற்று காலை 6:00 மணிக்கு, பழைய பேப்பர் டவுன் போலீசார் சுற்றி வளைத்தனர்.
போலீஸ்காரர் நாகராஜை, ஷாஹித் குரேஷி தாக்கினார். அதிர்ச்சி அடைந்த எஸ்.ஐ., நாகம்மா, துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு சரண் அடைய எச்சரித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் அவரது இடது காலில், நாகம்மா துப்பாக்கியால் சுட்டார். சுருண்டு விழுந்தவரை போலீசார் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். தாக்குதலில் காயம் அடைந்த போலீஸ்காரர் நாகராஜுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும்
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
-
சமயநல்லுாரில் ரயில்வே கேட் அவதி
-
வங்கக்கடலில் நிலநடுக்கம்! கோல்கட்டாவில் உணரப்பட்ட அதிர்வுகள்
-
வருவாய்க்கு அதிகமாக சொத்து குவிப்பு: கோவை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மீது பாய்ந்தது வழக்கு