2 மாத அன்னபாக்யா அரிசி ஒரே நேரத்தில் வழங்க முடிவு

கோலார்: ''அன்னபாக்யா திட்டத்தின் கீழ், பிப்ரவரி, மார்ச் மாதத்துக்கான அரிசி ஒரே நேரத்தில் வினியோகிக்கப்படும்,'' என உணவுத்துறை அமைச்சர் முனியப்பா தெரிவித்தார்.

கோலாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மாநிலத்துக்கு அரிசி விற்பனை செய்ய, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

எனவே கர்நாடக அரசு, கிலோவுக்கு 22.50 ரூபாய் கொடுத்து, அரிசி வாங்குகிறது. போக்குவரத்து செலவு உட்பட ஒரு கிலோவுக்கு 25 ரூபாய் செலவாகிறது.

அன்னபாக்யா திட்டத்தின் கீழ், பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான அரிசி, ஒரே நேரத்தில் வழங்கப்படும்.

அரிசி வினியோகிப்போருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு மாதந்தோறும் 2.10 டன் அரிசி தேவைப்படுகிறது. நான்கு கோடி மக்கள் பயன் அடைகின்றனர்.

ஐந்து வாக்குறுதி திட்டங்கள், மக்களின் முன்னேற்றத்துக்கும், மாநில வளர்ச்சிக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.

ஐந்து வாக்குறுதி திட்டங்களுக்கே, நிதி முழுமையாக செல்வதால் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

மாநிலத்தில் காங்கிரஸ் மிகவும் வலுவாக உள்ளது. அரசும் வளர்ச்சியில் ஆர்வம் காட்டுகிறது. எனவே வரும் தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில், காங்கிரசை மக்கள் ஆதரிப்பர்.

இவ்வாறு அவர் கூறினர்.

Advertisement