சீமான் கட்சிக்கு காளியம்மாள் முழுக்கு

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் விலகி வருகின்றனர். அதேபோல், அக்கட்சி பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளும் விலக இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வந்தன.

அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் இருந்தவர், நேற்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதுகுறித்து காளியம்மாள் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 'இனி, தமிழ் தேசியத்தை விதைக்கும் வழியில் என் பயணம் தொடரும்' என்று கூறியுள்ளார்.

Advertisement