பொதுக்குழு கூட்டம்

திருமங்கலம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருமங்கலம் கிளையின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் காமேஷ் வரவேற்றார்.

அறிவியல் இயக்க முன்னாள் மாநில தலைவர் தினகரன் 'அரிட்டாப்பட்டியும் சுற்றுச்சூழலும்' என்ற தலைப்பில் பேசினார். மாவட்டச் செயலாளர் மலர்ச்செல்வி கூட்ட செயல்பாடுகள் குறித்து பேசினார். பொருளாளர் முனீஸ்வரி நன்றி கூறினார்.

துணைத் தலைவர்கள் ரோஜா, ஆதிமூலம், துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், திருமங்கலம் நகர் நலச் சங்க நிர்வாகிகள் இருளப்பன், சக்கையா, அன்னை வசந்தா டிரஸ்ட் நிறுவனர் ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement