களஞ்சியம் மகளிர் குழுக்களின் விழா

மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் வட்டார களஞ்சியம் மகளிர் குழுக்களின் மகா சபா விழா வில்லாபுரத்தில் நடந்தது.

இயக்கத் தலைவி சின்னப்பிள்ளை தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் சுதா ராணி வரவேற்றார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சோபனா பேசுகையில், ''குழந்தை வளர்ப்பில் பெற்றோர் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

அலைபேசியை அதிக நேரம் பார்ப்பது உடல் நலத்தை பாதிக்கும். அலைபேசியின் பயன்பாட்டை குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுவதுடன், கல்வி அறிவை வளர்க்கும் வகையில் அறிவுறுத்த வேண்டும்'' என்றார்.

வட்டார செயலாளர் லிங்கம்மாள் ஆண்டு அறிக்கை வாசித்தார். கலை நிகழ்ச்சி நடந்தது. தானம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வாசிமலை, கோவை டாக்டர்கள் பாரதி, முத்துக்குமார், பேங்க் ஆப் இந்தியா மேலாளர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் ஆப்ரகாம் ஸ்டான்லி ஏற்பாடு செய்திருந்தார்.

Advertisement