பள்ளி, கல்லுாரி செய்திகள்

தேசிய கருத்தரங்கு



பெருங்குடி: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முதுகலை பொருளியல் துறை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் நிதி உதவியுடன் தேசிய கருத்தரங்கு நடந்தது. தமிழக கிராமப்புற முன்னேற்றம், பிரச்னைகள், வாய்ப்புகள் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் மீனா வரவேற்றார். பேராசிரியர்கள் புஷ்பராஜ், சதாசிவம், முத்துக்குமார், ரமேஷ்குமார் பேசினர். பேராசிரியர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். பேராசிரியர்கள் கோபாலசுந்தர், ஞானசவுந்தர், வித்யா, பாண்டி, வனிதா, செந்தில், ராஜா, பூர்ணிமா ஒருங்கிணைத்தனர்.

ஜி.எஸ்.டி., கருத்தரங்கு



திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை காம் கேப்ஸ் சங்கம் சார்பில் மத்திய கலால் தினத்தை முன்னிட்டு ஜி.எஸ்.டி. ஒரு கண்ணோட்டம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி சத்யபிரியா வரவேற்றார். மாணவர் நவநீதகிருஷ்ணன் அறிமுக உரையாற்றினார். கிதியோன் அசோசியேட்ஸ் கிதியோன்பால், சி.ஏ. ஆர்டிகில்சிப் பயிற்சியாளர் ஜான் இம்மானுவல் பேசினர். மாணவி சிந்து நன்றி கூறினார். கணினி பயன்பாட்டுத் துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.

கருத்தரங்கம்



கருமாத்துார்: அருள் ஆனந்தர் கல்லுாரி வணிக மேலாண்மையியல் துறை சார்பில் தொழில் முனைவோர்களின் புதிய போக்குகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. துறைத்தலைவர் அருண் பிரசாத் வரவேற்றார். முதல்வர் அன்பரசு, கல்லுாரி அதிபர் ஜான் பிரகாசம், செயலாளர் அந்தோணிசாமி, இணை முதல்வர் சுந்தரராஜ், தனியார் நிறுவனத் தலைவர் தினேஷ் கஜேந்திரன் சிறப்பு விருந்தினாராக பங்கேற்று தொழில்முனைவோரரின் தலைமைப்பண்புகள் குறித்து பேசினர். கார் மெல் மவுண்ட் கல்லுாரியின் நிர்வாகவியல் துணை பேரசிரிரியர் ஸ்டான்லி வின்சென்ட், இலங்கை துழிந்தரா பெரேரா ஆகியோர் பேசினர். ஒருங்கிணைப்பாளர் முத்துப்பெருமாள் நன்றி கூறினார்.

அறிவியல் தின விழா



மதுரை: சேர்மத்தாய் வாசன் கல்லுாரியில் யுரேகா இயற்பியல் மன்றம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் தின விழா நடந்தது. முதல்வர் கவிதா தலைமை வகித்தார். இஸ்ரோ ஓய்வுபெற்ற விஞ்ஞானி சிவசுப்பிரமணியம் பேசுகையில், ''பிரதமர் மனதோடு குரல்' நிகழ்ச்சியில் உரையாடியபோது அறிவியல் வளர்ச்சியில் முக்கிய பங்கு இளைஞர்களுடையது. என்று குறிப்பிட்டுள்ளார். புதிய கண்டுபிடிப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்தியாவில் 8 புதிய கண்டுபிடிப்புகள் 2024ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் ரோபோ முக்கிய பங்கு வகிக்கிறது'' என்றார். அறிவியல் இயக்க மாநில தலைவர் தினகரன், கல்லுாரி துணைத் தலைவர் குழந்தைவேலு, மாவட்டத் தலைவர் ராஜேஷ், அகில இந்திய மக்கள் சேவை தலைவர் ராஜமாணிக்கம், காமேஷ் பங்கேற்றனர்.

Advertisement