கட்டுமான பொறியாளர்கள் சங்க மாநில மாநாடு

திண்டுக்கல்: தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில மாநாடு திண்டுக்கல்லில் நடந்தது.

ஆர்.வி.எஸ்., பத்மாவதி ஆடிட்டோரியம் ஹாலில் நடந்த இதற்கு மாநாட்டுக்குழு தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். குழுபொருளாளர் டேவிட் ப்ராங்கிளின் வரவேற்றார். மாநில தலைவர் விஜயபானு, செயலர் பாஸ்கரன், பொருளாளர் அசோகன், துணைத்தலைவர் பிரபு, துணைச்செயலர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தனர். அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். எம்.பி., சச்சிதானந்தம், எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், காந்திராஜன், மேயர் இளமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கட்டுமான பொறியாளர்களுக்கு பொறியாளர் கவுன்சில் அமைத்துத்தர வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நியுசன்பில்டர்ஸ் முத்துகிருஷ்ணன், மேக்ஸ் கன்ஸ்ரக் ஷன் டேவிட் பிராங்கிளின், கே.பி.ஒய்., சொல்யுசன்ஸ் பாண்டியன், அருணாசேம்பர் பிரிக்ஸ் மணிகண்டன், வாசன் பில்டர்ஸ் சீனிவாசன், ஸ்ரீசவுடம்மன் எலக்ட்ரிகல்ஸ் தினேஷ், ராம் ஸ்டீல்ஸ் ராம்பிரசாத், பாரவேல் ஏஜன்சிஸ் பாரவேல், சிவக்குமார், தமிழ்நாடு மில்ஸ் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவக்குமார், பெஸ்ட் இன்டீரியர்ஸ் மோகன், அரசன் பைப்ஸ் எலக்ட்ரிகல்ஸ் சரவணன், திண்டுக்கல் வுட் ஒர்க்ஸ் பாலமுருகன், அக் ஷயா டிரேடிஸ் மார்ட் பிரகாஷ், சிவாபில்டர்ஸ் சிவசக்திவேல், ஜி.பி., செராமிக்ஸ் ஜி.பாலன், ஸ்ரீநாட்ராயன் போர்வல்ஸ் நாட்ராயன், பொறியாளர் பிரகலாதன், பத்மபிரியா செராமிக்ஸ் உரிமையாளர் ராஜகணேஷ், விஜயகுமார் பங்கேற்றனர்.

Advertisement