முதல்வர் மருந்தகம் திறப்பு

வடமதுரை :வடமதுரையில் முதல்வர் மருந்தக திறப்பு விழா நடந்தது.பேரூராட்சி தலைவர் நிருபாராணி கணேசன் திறந்து வைத்தார்.தி.மு.க., நகர செயலாளர் கணேசன், இன்ஸ்பெக்டர் கண்ணன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி துணைத் தலைவர் மலைச்சாமி, தி.மு.க., நகர அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர்கள் வீரமணி, அழகுமலை, கவுன்சிலர்கள் சசிக்குமார், சுப்பிரமணி, கார்த்திகேயன், மருதாம்பாள், விஜயா, சவுந்தராஜ் பங்கேற்றனர்.

*வேடசந்துாரில் எம்.எல்.ஏ., காந்திராஜன் திறந்து வைத்தார். கூட்டுறவு துணை பதிவாளர் அன்புக்கரசன், கூட்டுறவு செயலாளர்கள் கணேசன், சண்முகவேலு, தி.மு.க., நிர்வாகிகள் கவிதா, சவுடீஸ்வரி, கார்த்திகேயன், ரவிச்சந்திரன், கவிதாமுருகன், கார்த்தி, சுப்பிரமணி பங்கேற்றனர்.

..............

பள்ளி ஆண்டு விழா

எரியோடு : எரியோடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா காந்திராஜன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி, பி.டி.ஏ., தலைவர் பாலசுப்பிரமணியன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் வசந்தி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் நிர்மலா ஆண்டறிக்கை வாசித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் நாகஜோதி, காஜாமைதீன், தி.மு.க., நிர்வாகிகள் கவிதா, செந்தில்குமார், கார்த்திகேயன், சொக்கலிங்கம், இளங்கோ பங்கேற்றனர்.

Advertisement