தங்கம் விலை இன்றும் உயர்வு; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!

சென்னை: சென்னையில் இன்று (பிப்.,25) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.64,600க்கும், ஒரு கிராம் ரூ.8,075க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. நேற்று (பிப் 24) வார துவக்க முதல் நாளில், தங்கம் விலை சற்று உயர்ந்தது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,440க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, ஒரு கிராம் ரூ.8,055க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில், இன்று (பிப்.,25) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.64,600க்கும், ஒரு கிராம் ரூ.8,075க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து, ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வாசகர் கருத்து (1)
அப்பாவி - ,
25 பிப்,2025 - 11:03 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஜாக்டோ ஜியோ போராட்டம்: சிங்கம்புணரி ஒன்றியத்தில் 95 சதவீத பள்ளிகள் அடைப்பு
-
ஆசியாவிலேயே பெரிய தகவல் தரவு மையம்; திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
-
சட்டசபையில் கூச்சல், குழப்பம்; ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 12 பேர் சஸ்பெண்ட்
-
ஆந்திராவில் யானைகள் தாக்கி 5 பக்தர்கள் பரிதாப பலி
-
சீமான் வீட்டை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்க பிளான்: 10 பேர் கைது
-
பா.ஜ,வில் இருந்து ரஞ்சனா நாச்சியார் விலகல்
Advertisement
Advertisement