சிறுமி கர்ப்பம்: வாலிபருக்கு சிறை

திண்டுக்கல்: நத்தம் சமுத்திரப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சூர்யா22. 2023ல் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதில் சிறுமி கர்ப்பமானார். நத்தம் போலீசார் போக்சோ சட்டத்தில் சூர்யாவை கைது செய்தனர். இதன்வழக்கு திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது.

சூர்யாவுக்கு, 27 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கறிஞராக ஜோதி ஆஜரானார்.

Advertisement