குறைதீர் கூட்டத்தில் 323 பேர் முறையீடு

திண்டுக்கல்: ராணுவ உடையுடன் வந்து மனு, நிலத்தை அபகரிக்க முயற்சி என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மக்கள் குறைதீர் கூட்டத்தில் 323 பேர் மனுக்கள் வாயிலாக முறையிட்டனர்.

கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 323 மனுக்கள் பெறப்பட்டதில் தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி, கலந்துகொண்டனர்.

ஆத்துாரை சேர்ந்த ராணுவ வீரர் ராணுவ உடையுடன் வந்து அளித்த மனுவில், பாறைபட்டி பகுதியில் 5432 சதுர மீட்டர் நிலத்தை நெடுஞ்சாலத்துறையினர் எடுத்தனர்.

பலமுறை மனு அளித்தும் உரிய இழப்பீடு வழங்கவில்லை. பத்திரப்பதிவின் இடத்தில் ரோடு போடுகின்றனர். ஆட்சேபனை செய்தும் பலனில்லை என குறிப்பிடப்பட்டிருந்தார்.

பள்ளபட்டி ஊராட்சியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், திண்டுக்கல் மாநகராட்சியோடு எங்கள் ஊராட்சியை இணைத்தால் 100 நாள் வேலைத்திட்டம் உட்பட பல்வேறு அரசின் நலத்திட்டங்கள் பாதிக்கப்படும்.

கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டால் விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே, இணைப்பு முடிவை கைவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

Advertisement