25 கிலோ கஞ்சா பதுக்கிய இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை; கோவை காரமடையை சேர்ந்த சகோதரர்கள் தமிழ்செல்வன், 36, மகேஷ்குமார், 34. அதேபகுதியில் மெஸ் நடத்தி வந்தனர். அதற்கான காய்கறியை அவ்வப்போது வெளியில் இருந்து தங்களது சொந்த வாகனத்தில் எடுத்து வருவது வழக்கம்.

இருவரும், ஒடிசா, பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட, கஞ்சாவை காய்கறிகளுக்கு நடுவே மறைத்து, விற்பனைக்காக காரமடை எடுத்து வந்தனர். இத்தகவல் அறிந்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் இருந்து, 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன், கலெக்டர் பவன்குமாருக்கு பரிந்துரைத்தார். இருவர் மீதும், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டார்.

Advertisement