வைகை அணையில் பாசன நீர் நிறுத்தம்
ஆண்டிபட்டி: மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் முறைப்பாசன அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இம்மாவட்டங்களின் 2ம் போக பாசனத்திற்காக கால்வாய் வழியாக டிச. 18 முதல் வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டு தற்போது முறைப்பாசனம் நடைமுறையில் உள்ளது. பிப். 19ல் அணையில் இருந்து கால்வாய் வழியாக வினாடிக்கு 600 கன அடி நீர் திறக்கப்பட்டது. மறுநாள் 650 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
நேற்று காலை 6:00 மணிக்கு கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - -சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது. அணை நீர்மட்டம் 62.01 அடி( மொத்த உயரம் 71 அடி). நீர் வரத்து வினாடிக்கு 79 கன அடி.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எதிர்த்து எவர் வந்தாலும் எதிர்கொள்வோம்; லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
தங்கம் விலை இன்றும் உயர்வு; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
Advertisement
Advertisement