மார்ச் 8,9ல் நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் வனத்துறை சார்பில் மார்ச்8,9ம் தேதிகளில் நீர்பறவைகள் கணக்கெடுப்பும், மார்ச் 16ல் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு நடத்தவும் முடிவு செய்துள்ளது. இதில் பறவை ஆர்வலர்கள் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்த பின்பு ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு நடப்பது வழக்கம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 20க்கும் மேற்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 8, 9 தேதிகளில் நீர் பறவைகள் கணக்கெடுப்பும், மார்ச் 16ல் நிலப்பறவைகள் கணக்கெடுப்பும் நடத்த தமிழக வனத்துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மார்ச்8,9ல் ராஜபாளையம் ஆறாவது மைல் நீர்த்தேக்கம், ஸ்ரீவில்லிபுத்துாரில் அத்திகுளம், பெரியகுளம், மொட்ட பெத்தான், செங்குளம், வத்திராயிருப்பு புதுப்பட்டி கண்மாய், பிளவக்கல் அணை, வத்திராயிருப்பு சுந்தரபாண்டியம் கண்மாய்கள், கீழ ராஜகுலராமன், ஆலங்குளம், வெம்பக்கோட்டை அணை, சிவகாசி பெரியகுளம், கூட்டம் அணை குல்லூர் சந்தை விருதுநகர் பாலவனத்தம் அருப்புக்கோட்டை பெரியகுளம் வீரசோழன் நரிக்குடி உளக்குடி இருக்கன்குடி அணை மேல கரந்தை கண்மாய் ஆகிய 23 ஈர நிலங்களில் கணக்கெடுப்பு நடக்கிறது.
இதில் அந்தந்த பகுதியில் உள்ள பறவை ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம். கணக்கெடுப்பின்போது வனத்துறை அலுவலர் ஒருவர் உடனிருப்பார். எனவே, பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வனத்துறையினரை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்
-
கான்ஸ்டபிள் சம்பளம் உயர்வு; குறைந்தபட்ச கல்வித் தகுதி பிளஸ் 2: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
எதிர்த்து எவர் வந்தாலும் எதிர்கொள்வோம்; லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
தங்கம் விலை இன்றும் உயர்வு; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி