ஆர்ப்பாட்டம்

சாத்துார்: கனிம வள கொள்ளை சம்பவத்தில் 7 அலுவலர்களை கலெக்டர் ஜெயசீலன் சஸ்பெண்ட் செய்த உத்தரவை கண்டித்தும் ரத்து செய்ய வலியுறுத்தியும் சாத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று மாவட்ட அளவில் வி.ஏ.ஓ.க்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநிலத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார் பொருளாளர் வெள்ளை பாண்டியன் முன்னிலை வகித்தார். சாத்துார், சிவகாசி, வெம்பக்கோட்டை,காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, ஸ்ரீவி., ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு தாலுகா பகுதியில் இருந்து வந்திருந்த வி.ஏ.ஓக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Advertisement