சட்டசபையில் கூச்சல், குழப்பம்; ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 12 பேர் சஸ்பெண்ட்

1


புதுடில்லி: டில்லி சட்டசபை கூட்டத்தில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 12 பேரை இன்று (பிப்.,25) ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் விஜேந்தர் குப்தா உத்தரவிட்டார்.


டில்லியில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில், 27 ஆண்டுகளுக்கு பின் பெரும்பான்மை இடங்களை பெற்று பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுள்ளார். புதிய எம்.எல்.ஏ.,க்களுடன் டில்லி 8வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று (பிப்.,25) கூடியது.

புதிய எம்.எல்.ஏ.,க்கள் காலை 11 மணிக்கு பதவியேற்றனர். கூட்டத்தொடரில் மதுபான கொள்கை தொடர்பாக சி.ஏ.ஜி., அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவத்து ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.



இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. பின்னர், எதிர்க்கட்சி தலைவர் அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 12 பேரை இன்று (பிப்.,25) ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் விஜேந்தர் குப்தா உத்தரவிட்டார்.

சட்டசபைக்கு வெளியே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement