சீமான் வீட்டை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்க பிளான்: 10 பேர் கைது

சென்னை; சீமான் வீட்டை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்க திட்டமிட்டதாக 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிடம், ஈ.வெ.ரா., பற்றி கூறி வரும் கருத்துகள் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையாக மாறின. அவரது பேச்சுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த விவகாரத்தில் சீமானுக்கும், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து முரண் எழுந்ததாக தெரிகிறது. மேலும் தமிழ்த் தேசியத்தில் இருந்து அவர் வழுவிச் செல்வதாகவும் கட்சினர் குற்றம்சாட்டி வந்தனர். கட்சியில் இருந்து மாநில, மாவட்ட பொறுப்புகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலரும் விலகி கொண்டு வருகின்றனர்.
இந் நிலையில், சீமான் வீட்டை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்க திட்டமிட்டதாக 10 பேரை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள விடுதியில் தங்கி இருந்த அவர்கள், பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு, நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு செல்ல முயன்றபோது போலீசிடம் சிக்கினர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெட்ரோல் குண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் உள்ளிட்டவற்றை போலீசார் கைது செய்துள்னர். அவர்களுடன் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.





மேலும்
-
யாருடைய கையிலும், காலிலும்...! நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான் பதில்
-
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்., முன்னாள் எம்.பி.,க்கு ஆயுள் தண்டனை
-
மும்மொழி கொள்கை குறித்து முதல்வர் பதில் அளிக்காதது ஏன்? அண்ணாமலை கேள்வி
-
வெளியுறவு விவகாரத்தில் தலையிட முடியாது; சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
-
கடலூரில் இளைஞர்கள் 2 பேர் கொன்று புதைப்பு; அதிர்ச்சி சம்பவம்
-
அசாம் வடகிழக்கு மாநிலங்களின் உற்பத்தி மையமாக மாறும்; பிரதமர் மோடி நம்பிக்கை