ஆசியாவிலேயே பெரிய தகவல் தரவு மையம்; திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: சென்னையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய தகவல் தரவு மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனால், 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
CtrlS குழுமம் ரூ.4,000 கோடி முதலீட்டில், 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அம்பத்தூரில் அமைத்துள்ள சென்னை தகவல் தரவு மையத்தை முதல்வர் ஸ்டலின் இன்று திறந்து வைத்தார்.
குத்துச்சண்டை
கோபாலபுரத்தில் ரூ.8 கோடியில் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அவர் குத்துச்சண்டை போட்டியை நேரில் கண்டு களித்தார்.
2,500 சதுர அடியில் 2 பாக்சிங் ரிங் உடன், ஒரே சமயத்தில் 750 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தொண்டர்களுக்கு கடிதம்
முன்னதாக, தி.மு.க., தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதி கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஹிந்தி படிக்காதே என்று யாரையும் தடுக்கவில்லை. ஹிந்தியை எங்கள் மீது திணிக்காதே! ஆதிக்க சக்திகளுடன் அறப்போரைத் தொடர்ந்து நடத்துகிறோம். இந்தப் போரில் ஒருபோதும் சமரசமில்லை. ஹிந்தியை அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஹிந்தி ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று நான் உறுதி அளிக்கிறேன். ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய் மொழியைக் காப்பதும் தி.மு.க.,வினர் இரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும்
-
மதுபானக் கொள்கையால் டில்லி அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு: சி.ஏ.ஜி., அறிக்கையில் குற்றச்சாட்டு
-
யாருடைய கையிலும், காலிலும்...! நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான் பதில்
-
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்., முன்னாள் எம்.பி.,க்கு ஆயுள் தண்டனை
-
மும்மொழி கொள்கை குறித்து முதல்வர் பதில் அளிக்காதது ஏன்? அண்ணாமலை கேள்வி
-
வெளியுறவு விவகாரத்தில் தலையிட முடியாது; சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
-
கடலூரில் இளைஞர்கள் 2 பேர் கொன்று புதைப்பு; அதிர்ச்சி சம்பவம்