யாருடைய கையிலும், காலிலும்...! நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான் பதில்

சென்னை: 'யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் (நாம் தமிழர் கட்சி) இல்லை' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
ராணிப்பேட்டையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: ஹிந்தி திணிப்பிற்கு எதிராக தி.மு.க., போராட்டம் நடத்தவில்லை. நாடகம் நடத்தி கொண்டு இருக்கிறது. 60 வருடமாக நடத்தி கொண்டு தான் இருக்கிறார்கள். தி.மு.க., காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துள்ளது. கட்டாய ஹிந்தி திணிப்பில் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?
சொந்த விருப்பம்
என்னை மீறி, முடிந்தால் ஹிந்தி மொழியை திணித்து காட்டுங்கள். நாம் தமிழர் கட்சியில் நிர்வாகிகள் நீடிப்பது, வெளியேறுவதும் அவரவர் சொந்த விருப்பம். இது ஒரு ஜனநாயக இயக்கம். விரும்பியவர்கள் கட்சிக்கு வருவார்கள், போவர்கள், இது குறித்து பேசிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது ஒரு செய்தியாக ஒவ்வொரு முறையும் கேட்கிறீர்கள்.
அதை விட்டுருங்க
நான் பதில் சொல்ல வேண்டியது இருக்கிறது. அதை விடுங்கள், இது எனது கட்சி பிரச்னை.கொள்கை மீது விருப்பம் உள்ளவர்கள் கட்சியில் பயணிப்பார்கள். வேறு ஒரு காரணம் இருக்கிறது என்று நினைத்தால் வெளியேறுவார்கள். யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் இல்லை. அதை விட்டுருங்க. முரண்பாடு உள்ளவர்கள் வெளியேறுகிறார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.





மேலும்
-
போலீஸ் ஸ்டேஷனில் பெண் மானபங்கம்: இன்ஸ்பெக்டர் உட்பட மூவருக்கு 10 ஆண்டு சிறை
-
ஈரானுடன் வர்த்தகம்: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
-
குடிபோதையில் புகுந்த கும்பல் தாக்குதல்: கர்நாடகாவில் மருத்துவர்கள் போராட்டம்
-
அமித்ஷா வரவேற்பு பதாகைகள் அகற்றம்; கோவையில் பா.ஜ.,வினர் சாலை மறியல்
-
இந்தியாவை முந்தாவிட்டால் பெயரை மாற்றுகிறேன்: சொல்கிறார் பாகிஸ்தான் பிரதமர்
-
எல்லோரும் கொண்டாடுவோம்...