வெளியுறவு விவகாரத்தில் தலையிட முடியாது; சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

புதுடில்லி: 'வெளியுறவு விவகாரத்தில் நீதிமன்றத்தால் தலையிட முடியாது' என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வங்க தேசத்தில் ஹிந்துகளுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. அங்கு வசிக்கும் ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, இன்று (பிப்.,25) சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
* வெளியுறவு விவகாரத்தில் தலையிட முடியாது. அண்டை நாட்டு விவகாரங்களில் நீதிமன்றத்தால் எப்படி கருத்து தெரிவிக்க முடியும்?
* இந்த நீதிமன்றம் வேறொரு நாட்டின் விஷயத்தில், அதுவும் ஒரு அண்டை நாட்டின் விஷயத்தில் தலையிட்டால் அது மிகவும் விசித்திரமாக இருக்கும். இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பின்னர், வங்கதேசத்தில் உள்ள ஹிந்துகளின் பாதுகாப்பு உறுதி செய்ய உத்தரவிட கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
மேலும்
-
போலீஸ் ஸ்டேஷனில் பெண் மானபங்கம்: இன்ஸ்பெக்டர் உட்பட மூவருக்கு 10 ஆண்டு சிறை
-
ஈரானுடன் வர்த்தகம்: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
-
குடிபோதையில் புகுந்த கும்பல் தாக்குதல்: கர்நாடகாவில் மருத்துவர்கள் போராட்டம்
-
அமித்ஷா வரவேற்பு பதாகைகள் அகற்றம்; கோவையில் பா.ஜ.,வினர் சாலை மறியல்
-
இந்தியாவை முந்தாவிட்டால் பெயரை மாற்றுகிறேன்: சொல்கிறார் பாகிஸ்தான் பிரதமர்
-
எல்லோரும் கொண்டாடுவோம்...