கடலூரில் இளைஞர்கள் 2 பேர் கொன்று புதைப்பு; அதிர்ச்சி சம்பவம்

கடலூர்: கடலூரில் அடுத்தடுத்து காணாமல் போன இளைஞர்கள் 2 பேர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கடலூர் மாவட்டம் எம்.புதூர் மற்றும் டி.புதூர் பகுதியை சேர்ந்த அப்புராஜ் மற்றும் சரண் ராஜ் அடுத்தடுத்து மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.


பின்னர், நெய்வேலி அடுத்த மண்மேடு பகுதியில் இளைஞர்கள் 2 பேர் கொன்று புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. புதைக்கப்பட்ட இளைஞர்களின் உடல்களை தோண்டி எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


முதல்கட்டமாக, 5 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கிறது.

Advertisement