அசாம் வடகிழக்கு மாநிலங்களின் உற்பத்தி மையமாக மாறும்; பிரதமர் மோடி நம்பிக்கை

6


குவகாத்தி: அசாம் விரைவில் வடகிழக்கு மாநிலங்களின் உற்பத்தி மையமாக மாறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.


அசாம் மாநிலம் குவகாத்தியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அசாம் முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாக மாறியுள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை, நல்லாட்சி மற்றும் சீர்திருத்தங்களே இந்தியாவின் மீதான உலக நம்பிக்கை அதிகரிக்க காரணம்.



அசாம் விரைவில் வடகிழக்கு மாநிலங்களின் உற்பத்தி மையமாக மாறும். உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், இந்தியாவின் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. பா.ஜ., ஆட்சியின் போது அசாம் பொருளாதாரத்தின் மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக இரட்டிப்பாகியுள்ளது. இந்தியாவின் செழிப்பில் கிழக்கு இந்தியா முக்கிய பங்கு வகித்தது என்பதற்கு வரலாறு சாட்சி.


தற்போது இந்தியாவின் வளர்ச்சியில் வட கிழக்கு மாநிலம் வலிமையைக் காட்டப் போகிறது. நாடு வளர்ச்சிக்கான பாதையில் செல்லும் என்று, நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement