கொண்டமநாயக்கன்பட்டியில்விதை கிராம விவசாய பயிற்சி


நாமக்கல்:நாமக்கல் அடுத்த கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில், விதை கிராம விவசாய பயிற்சி முகாம் நடந்தது. சேந்தமங்கலம் வேளாண் அலுவலர் அருள்ராணி தலைமை வகித்தார். இதில், விதை நேர்த்தி முறைகளான விதை ஊர வைத்தல், விதை முலாம் பூசுதல், விதை உறை, விதை சிகிச்சை முறைகள் குறித்து விளக்கப்பட்டது. இம்முறைகளை பின்பற்றுவதன் மூலம், தரமற்ற விதைகளை நீக்குதல், முளைப்பு திறனை அதிகப்படுத்துதல், சீரான முளைப்பு திறனை ஊக்குவித்தல் மற்றும் விதை நம்பகத்தன்மையை மேம்படுத்தும்.
தொடர்ந்து, இயற்கை வேளாண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசின் விதை திட்டங்களான தேசிய விதை கொள்கை - 2002, விதைச்சட்டம் - 1966, தாவர இனங்களை பாதுகாக்கும் மற்றும் விவசாயிகள் உரிமைச்சட்டம் - 2001 பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு, விதைச்சான்று அட்டைகளான வெள்ளை, மஞ்சள், நீலம் மற்றும் ஊதா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விதைக்கொள்கையின் நோக்கங்களான தரம் உயர்த்துதல், முறையான வினியோகம் செய்தல், விதை ஆராய்ச்சி, ஏற்றுமதி, இறக்குமதி, தொழிற்சாலைகள், கண்
காணிப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.

Advertisement