நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு : லால்புரத்தில் உண்ணாவிரதம்

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியுடன், ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து லால்புரம் கிராம மக்கள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம், சி.கொத்தங்குடி, சி. தண்டேஸ்வரர்நல்லுார், பரமேஸ்வரநல்லுார், உசுப்பூர், பள்ளிப்படை ஆகிய 6 ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து ஊராட்சி மக்களும், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் லால்புரம் ஊராட்சி மக்கள் 1,000த்திற்கும் மேற்பட்டோர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஊராட்சி அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் சேகர், ஆனந்த், சாய்பிரகாஷ், சத்தியமூர்த்தி, மூர்த்தி ,ராஜேந்திரன், தமிமுன் அன்சாரி, ரவி, கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement