ஹிந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க., மாணவரணி ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் தலைமை தபால் நிலையம் முன் மேற்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி மற்றும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

நகர செயலாளர் தண்டபாணி, துணை செயலாளர் ராமு, ஒன்றிய செயலாளர்கள் பாவாடை கோவிந்தசாமி, வேல்முருகன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் சிவனேசன், சேதுபதி, பிலோமின் முன்னிலை வகித்தனர்.

மாணவரணி துணை அமைப்பாளர் செல்வமணி வரவேற்றார். இந்திய மாணவர் சங்க மாநில துணை தலைவர் குமரவேல், மாவட்ட தலைவர் பூபதி பேசினர்.

மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் அருள்குமார், துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தளபதி குமார், பாபு, நிஷாந்த், சாக்ரடீஸ், குரு, வட்ட செயலர்கள் சங்கர், இனியராஜ், மணிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஹிந்தியை திணிக்கும் பா.ஜ., அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

முற்போக்கு மாணவர் கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி நன்றி கூறினார்.

Advertisement