ஒரே கல்லில் 2 மாங்காய்... சொந்த வேலைக்கு அரசு வாகனம் ஊராட்சி இன்ஜினியர்கள் 'பலே'

கடலுார் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய சேர்மன்களுக்கு வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்ய தமிழக அரசு கடந்த ஒரு ஆண்டிற்கு முன் புதிய ஸ்கார்பியோ கார்கள் வழங்கியது. கடந்த மாதம் அவர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.

இதனால், கார்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ஒன்றிய சேர்மன்கள் பயன்படுத்தி வந்த கார்கள் மூலமாக அந்தந்த ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் இன்ஜினியர்கள் திட்டப் பணிகளை ஆய்வு செய்து, அலுவலகத்தில் நிறுத்தி வைக்க வேண்டுமென, ஊரக வளர்ச்சித் துறை கமிஷனர் உத்தரவிட்டார்.

ஆனால், கமிஷனர் உத்தரவை இன்ஜினியர்கள் காற்றில் பறக்க விட்டுள்ளனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போன்று காரில் வளர்ச்சி திட்டப் பணிகளையும் ஆய்வு செய்து, பின், வீட்டிற்கு கொண்டு சென்று சொந்த வேலைக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அரசின் காரை இன்ஜினியர்கள் சொந்த வேலைக்கு பயன்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Advertisement